கடவுள் வாழ்த்து : உன் பெயரோடு " துணை " என்று எழுதினால் அது கடவுள்வாழ்த்து
செய்யுள் : நீ செய்வதை சொன்னால் அது செய்யுள்
கவிதை : உன் பெயரை எழுதினால் அது கவிதை
கட்டுரை : உன்னை பற்றி எழுதும் அனைத்தும் கட்டுரை
இலக்கணம் : நீ பேசிய வார்த்தைகள் இலக்கணம்
இன்னிசைஅளபெடை: நீ சிந்தும் சிரிப்பு இன்னிசைஅளபெடை
உயிர் எழுத்து : நீ
மெய் எழுத்து : நான்
உயிர்மெய்எழுத்து : நம் காதல்
துணை எழுத்து : நம் குழந்தைகள்
ஆயுத எழுத்து : திசைக்கு ஒரு புறம் இருக்கும் நம் பெற்றோர்கள்
No comments:
Post a Comment