Monday, March 10, 2008

என்னவளே நான் யார் ?


கண்கள் உண்டு ஆனால்
பார்க்கும் திறன் இல்லை ஆனால்
உன் கண்களாலே
என் கண்ணை காண்பாய் நீ

உன் மழலை பருவத்தில் நீ
உறங்குவதற்காக
உன் முத்தமழையில் மூழ்கி
நீச்சல் அடிக்கும் வீரன் - நான்


உன் பள்ளி பருவத்தில்
உன் பரம வைரிகளை பலி வாங்கவும்
உன்னை பாதுகாக்கும் வீரவாள் - நான்

உன் கரிசல் காட்டில் முளைக்கும்
பூச்சிகளை வதம் செய்யும்
பீரங்கி துப்பாக்கியாய் - நான்

உன் வாழ்க்கையில் நீ செய்யும்
சவால்களுக்கு கொடிமரம் - நான்
உன் நியாபக மரதிக்கு நானே
திகடட்டாத தீனி

உன் கோபத்திற்கு நானே
புகைவராத சிகரெட்

வெட்டினாலும் துப்பினாலும்
வளரும் அருகம்புல் செடி - நான்

உன் கல்லூரி காலத்திலே
வண்ணங்கள் பல தீட்டி நீ
கோலம் போடும்
உன் வீட்டு வாயில் - நான்

உன் சூட்டை தணிக்க வெள்ளை
ஆடை உடுத்தும் விதவை - நான்

என் மனதை அறிய திருவிழா
காலத்தில் - நீவைக்கும் மருதாணி
பரீட்சையில் - நான்முதல் மாணவன்.

உன் எண்ணங்களை
சிலைகளாய்செதுக்கும்
உழிக்கோ ஆணிவேர் - நான்

வேண்டாம் என்று நிராகரித்தாலும்
வளருவேன் என் காதல் போல்
என் வளர்ச்சி பொய்யான வளர்ச்சி
என்கிறது அறிவியல்

எத்தனை அறிஞர்கள்
என்னை அகழ்வாராய்ச்சிசெய்தாலும்
உன்னோடு பிறந்த
கவசகுண்டலம் - நான்

கலாச்சாரம் மாறினாலும்
புரட்சிகள் வெடித்தாலும்
பண்பாடு மாறாமல்
உன்னுடனே உடன்கட்டை
ஏறும்முரட்டு பக்தன் - நான்

என்றும் உன்.....
நகக்கன்னாய்....நான்.....

No comments: