Wednesday, March 26, 2008

தின காலண்டர்

தினசரி புத்தாடை
உடுத்தும் நாட்காட்டி

Tuesday, March 25, 2008

செய்திகள்


தலைப்பு செய்திகள்,
அரசியல் செய்திகள்,
மாநில செய்திகள்,
மாவட்ட செய்திகள்,
உலக செய்திகள் ,
வணிக செய்திகள் ,
விளையாட்டு செய்திகள் ,

அட இதிலும் இத்தனை சாதி பிரிவுகளா ???

காதலர்களே உஷார்...

சாதி,
மதம்,
பொருளாதாரம்,
சீர்வரிசை,
கெளரவம் என்னும்
ஐயம்புலன்கள் தான்
திருமணம் என்னும்
அமைச்சரவையில் முக்கிய இலக்காகள்

இவறறில் ஏதாவது ஒன்றிக்காக
உங்கள் காதல் தடைப்பட்டு
அது திருமணத்தில் முடியவில்லை என்றால்
அது கல்லறை திருமணம்தான்......

இந்தியா காதல் பூமீயாய் இருப்பதை
காதலர்கள் பூமீயாகவும் மாற்றுங்கள்.....
காதலர்களே உஷார்...

Monday, March 24, 2008

என்னுடைய கறுப்பு பெட்டி


Inbox :
உன்னுடைய மெயில் காக ஓவ்வொரு மணிதுளியும்
தன்னை ரேபிரேஷ் செய்த்து காத்துகிடகிறது

Starred:
உன்னுடைய பெயரில் வரும் அத்தனை
மெயில்களும் Starred கீரிடம் வைத்துள்ளன

Chats:
உன்னோடு Chat செய்த Chat மெயில்களின்
வரலாறு பட்டியல் இடபட்டுஉள்ளது

Sent Mail:
உனக்காக நான் அனுப்பிய மெயில்கள்
உன்னிடம் சென்று விட்ட அகந்தையால் என்னை பார்கின்றன

Drafts:
உனக்கு அனுப்ப விருக்கும் மெயில்கள்
வரிசையை காத்து நிற்கின்றன

All Mail:
இதற்கும் என்னுடைய இன்போக்ஸ்
வித்தியாசம் தெரியவில்லையடி

Spam:
உன் பெயரில் உன்னை தவிர எல்லாரும்
அனுப்பும் மெயில்கள் ஸ்பாமில் கூடு கட்டுகின்றன

Trash:
உன்னை தவிர மாற்ற எல்லோரும் அனுப்பிய மெயில்கள்

Friday, March 21, 2008

என்னவளே

என் உடலில் உள்ள மற்ற
உடல் பாகங்கள் எல்லாம் புலம்புகின்றன
அதிஷ்டம் இதயத்துக்கு மட்டும் எப்படி கிடைத்தது ?
********
பெண்னே...
மறக்காமல்
உன் வீட்டிற்கு சென்றஉடன்
உன்விரல்களை கழுவிவிடு
உன் கையில்
இரத்தகறை படிந்திவிடக் கூடும்

********
வருத்தம் இல்லையடி
கல்லறையில்லாவது
நிம்மதியாய்உறங்குவேன்
நானும் என் பிறவி பயனை
அடைந்துவிட்டேன் என்று

***********

உன் விட்டில் இருக்கும் ரோஜா செடிக்கு
தினமும் தண்ணிர் தெளிப்பது போல்...
கண்ணாடி தொட்டியில் இருக்கும்
வண்ண கலர் மீன்களை பார்ப்பது போல்...
தினமும் ஒரு முறையேனும்
இந்த இதயத்தை கையால் எடு

************
இதயத்தை பத்திரமாக வைத்திரு
மற்ற பெண்களிடம்
காண்பிக்கவேண்டாம்...
கண்டிப்பாக அபகரித்து விடுவார்கள்....

Wednesday, March 19, 2008

ஒரு தலை காதல்

சுவிங்கம் போன்ற என் மனதை
கண்கள் என்னும் வாயில் போட்டு
பார்வை என்னும் பல்லால் மென்று விட்டு
காதல் எனற போது துப்பி விட்டயடி

Saturday, March 15, 2008

என்னவள் என்பவள் யார்?

கடவுள் வாழ்த்து :
உன் பெயரோடு " துணை " என்று எழுதினால் அது கடவுள்வாழ்த்து

செய்யுள் : நீ செய்வதை சொன்னால் அது செய்யுள்

கவிதை : உன் பெயரை எழுதினால் அது கவிதை

கட்டுரை : உன்னை பற்றி எழுதும் அனைத்தும் கட்டுரை

இலக்கணம் : நீ பேசிய வார்த்தைகள் இலக்கணம்

இன்னிசைஅளபெடை: நீ சிந்தும் சிரிப்பு இன்னிசைஅளபெடை

உயிர் எழுத்து : நீ

மெய் எழுத்து : நான்

உயிர்மெய்எழுத்து : நம் காதல்

துணை எழுத்து : நம் குழந்தைகள்

ஆயுத எழுத்து : திசைக்கு ஒரு புறம் இருக்கும் நம் பெற்றோர்கள்

மனநிலை


மழைக்கு பின்பு புழுக்கமாய் இருந்தது
மண் வாசனை காற்றில் கரைந்து இருந்தது
நிறை வேற காதலின்
நினைவு சுமைகள் நெஞ்சில்
பாரமாய் இருந்தது

Friday, March 14, 2008

சரித்திரம்


லைலா - மஜுனு
அம்பிகாவதி - அமராவதி
ரோமியோ - ஜுலியட்
எப்படி சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள் ?
வாழ்ந்து அல்ல
காதலித்து தான் .......

முகப்பரு


என்னவளின் முகத்தில்
தேன் குடித்த
தேனீகள் சிந்திய
தேன் துளிகள்

காதல் குறள்

தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாத
உன் விழியினால் சுட்டவடு

Wednesday, March 12, 2008

செல்பேசி

எல்லாருடைய கையிளும்
அடிக்கடி சினுங்கும்
கை குழந்தை

பிரசவம்

மறுபிறவி எடுக்கும்
மங்கையின்
மறு அவதாரம்

Tuesday, March 11, 2008

இந்தியா


இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 48.75 $

பீகாரில் தெருவிற்கு தெரு ஏ.டி.எம் மையங்கள் திறப்பு

கர்நாடக உடனான காவேரி பிரச்சனையில் தமிழகத்துக்கு தாராளம்

இந்தியாவில் விமான தளங்கள் இல்லாத மாவட்டங்கள் இல்லை

இந்தியாவில் கணிபொறி இல்லாத வீடுகள் இல்லை

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா முதல் இடம்

குஜராத்தில் மத கலவரம் இல்லை

இலங்கையில் இன கலவரம் இல்லை

காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது

நடத்து முடித்த தேர்தலில் நூறு சதவிகித வாக்குபதிவு

துண்டு விலாத பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்பணம்

உலக வல்லரசு வரிசையில் இந்தியா முதல் இடம்



காலை கதிரவன்
கண்ணில் முத்தம்மிட
கனவு கலைந்தது

Monday, March 10, 2008

என்னவளே நான் யார் ?


கண்கள் உண்டு ஆனால்
பார்க்கும் திறன் இல்லை ஆனால்
உன் கண்களாலே
என் கண்ணை காண்பாய் நீ

உன் மழலை பருவத்தில் நீ
உறங்குவதற்காக
உன் முத்தமழையில் மூழ்கி
நீச்சல் அடிக்கும் வீரன் - நான்


உன் பள்ளி பருவத்தில்
உன் பரம வைரிகளை பலி வாங்கவும்
உன்னை பாதுகாக்கும் வீரவாள் - நான்

உன் கரிசல் காட்டில் முளைக்கும்
பூச்சிகளை வதம் செய்யும்
பீரங்கி துப்பாக்கியாய் - நான்

உன் வாழ்க்கையில் நீ செய்யும்
சவால்களுக்கு கொடிமரம் - நான்
உன் நியாபக மரதிக்கு நானே
திகடட்டாத தீனி

உன் கோபத்திற்கு நானே
புகைவராத சிகரெட்

வெட்டினாலும் துப்பினாலும்
வளரும் அருகம்புல் செடி - நான்

உன் கல்லூரி காலத்திலே
வண்ணங்கள் பல தீட்டி நீ
கோலம் போடும்
உன் வீட்டு வாயில் - நான்

உன் சூட்டை தணிக்க வெள்ளை
ஆடை உடுத்தும் விதவை - நான்

என் மனதை அறிய திருவிழா
காலத்தில் - நீவைக்கும் மருதாணி
பரீட்சையில் - நான்முதல் மாணவன்.

உன் எண்ணங்களை
சிலைகளாய்செதுக்கும்
உழிக்கோ ஆணிவேர் - நான்

வேண்டாம் என்று நிராகரித்தாலும்
வளருவேன் என் காதல் போல்
என் வளர்ச்சி பொய்யான வளர்ச்சி
என்கிறது அறிவியல்

எத்தனை அறிஞர்கள்
என்னை அகழ்வாராய்ச்சிசெய்தாலும்
உன்னோடு பிறந்த
கவசகுண்டலம் - நான்

கலாச்சாரம் மாறினாலும்
புரட்சிகள் வெடித்தாலும்
பண்பாடு மாறாமல்
உன்னுடனே உடன்கட்டை
ஏறும்முரட்டு பக்தன் - நான்

என்றும் உன்.....
நகக்கன்னாய்....நான்.....

Sunday, March 9, 2008

அதிர்வுகள்


உன்னுடைய மெல்லிய
சிரிப்புக்குள்
எனக்குள்
மில்லியன் அதிர்வுகள்

கடல் சங்கு












கடல் சங்கை
காதில் வைத்தால்
கடல் ஓசையோடு
கடல் அலையின்
--- இரைச்சல் இருக்கும்






என்னுடைய செல்பேசியை
என் காதில் வைத்தால்
உன் குரலோடு
உன் சிரிப்பின்
---- இசை இருக்குதடி

Monday, March 3, 2008

இந்தியா ஒளிர்கிறது


இந்தியா ஒளிர்கிறது
கும்பகோணத்தில்
பள்ளி குழந்தைகள்
எரிந்த தீயில்


நாடாளும் மன்னர்களே
உங்களின் இல்லங்கள்
உங்கள் பினாமிகளின் இல்லங்கள்
பாராளுமன்ற கட்டிடங்கள்
சட்டசபை கட்டிடங்கள்
உங்களின் கட்சி அலுவலங்கள்
எல்லா வற்றிலும் கூரைபோடுங்கள்
இல்லையேனில்
பள்ளி கூடங்களின்
கூரையை மாற்றுங்கள்.