Wednesday, April 23, 2008

அவள் கண்





புவிஈர்ப்பு விசையின்
மதிப்பு தெரியும்....
என் கண்மணியே
உன் விழி ஈர்ப்பு விசையின்
மதிப்பு என்ன ?????

Tuesday, April 22, 2008

நீ எந்த மாதத்தில் பிறந்தாய்




என்னவளே..........
நீ எந்த மாதத்தில் பிறந்தாய்

சித்திரையில் பிறந்தயா?
என் நித்திரையை கெடுக்கிறாய்..........

வைகாசியில் பிறந்தயா?
என்னை வசியம் செய்துவிடாய்..........

ஆனியில் பிறந்தயா?
என் நெஞ்சில் ஆணியாய் பதிந்துவிடாய்..........

ஆடியில் பிறந்தயா?
என்னை ஆட்டி படைக்கிறாய்..........
ஆவணியில் பிறந்தயா?
என் மனதில் உன் தாவணி கனவு வைகிறாய்..........

புரட்டசியில் பிறந்தயா?
என்னை உன் நினைவுகளில் புரட்டிஎடுகிறாய்..........

ஐப்பசியில் பிறந்தயா?
என் நெஞ்சில் அப்பி பதிந்துவிட்டாய்..........

கார்த்திகையில் பிறந்தயா?
என் கண்களுக்கு கார்த்திகை தீபமாய் தெரிகிறாய்..........

மார்கழியில் பிறந்தயா?
என் நினைவுகளுக்கு மார்கழி குளிராய் இருகிறாய்..........

தையில் பிறந்தயா?
என் இதயத்தில் குடியேறி விட்டாய்..........

மாசியில் பிறந்தயா?
என் மனதில் மங்கள இசையாய் ஒலிக்கிறாய்..........

பங்குனியில் பிறந்தயா?
என் உள்ளத்தில் உறைபனியாய் இருகிறாய்..........

Sunday, April 20, 2008

இதயம்......... நீ

எத்தனை நோய்கள் வந்தாளும்
எனக்கு மாரடைப்பு நோய்
மட்டும் வராது
என் இதயம் என்னிடம் இல்லை

எத்தனை நோய்கள் வந்தாளும்
எனக்கு மாரடைப்பு நோய்
மட்டும் வராது
இந்த இதயத்தில் நீ இருப்பதால்

Saturday, April 19, 2008

நீ........

உன் கூந்தலில் வைக்கும்
பூக்கள் மட்டும் வாடாமல் இருக்கிறதே....
உன் கூந்தல் என்ன குளிர்சாதனபெட்டியா?

Thursday, April 17, 2008

நீ........ நிலா


நிலாவில் உயிர் வாழமுடியாது
என்கிறார்கள் அறிஞர்கள்...
நம் திருமணம் நடந்தால்
நான் நிலாவோடு வாழ்வேன்

Tuesday, April 15, 2008

பிறை நிலா

வானத்தில் இன்று
மூன்றாம் பிறை.
உண்மையை சொல்.....
உன் நகத்தை கடித்து
துப்பியது நீ தானே!!!!!

Wednesday, April 9, 2008

நாங்களும் மனிதர்கள் தான்

சாப்ட்வேர் வல்லுந்ர்களே சபிகாதீர்கள்
நாங்களும் மனிதர்கள் தான்

நாங்கள் வாங்கும் முழுசம்பள பணத்திற்கும்
அரசிற்கு வரிகட்டுகிறோம்....
நாங்கள் மேசைக்கு கீழே கீம்பளம்
வாங்குவது கிடையாது.....

எங்கள் அலுவலகங்களில் அரசு அலுவலகங்கள் போல்
வேலை நேரபலகை இல்லை

இந்தியா வேலை அமைப்பு சட்டத்தின்
சாதி,மதம் என்னும் கட்டத்தை
எங்கள் அலுவலகங்களில் உபயோபடுத்துவது இல்லை

எங்களுக்கு வெயிலின் அருமை தெரியாது
ஆனால் மன அழுத்தத்தின் வலி தெரியும்

எங்களுக்கு சம்பளம் அதிகம் என்று எண்ணுகிறோர்கள்
ஆனால் உங்களை போல் சாகும்வரை
ஓய்வு ஊதியம் இல்லை

மற்ற துறைகளால் இந்தியனின் அறிவு மதிப்பு
அந்நியனுக்கு தெரிந்ததைவிட
எங்களால் தெரிந்தது அதிகம்

எங்கள் அருமை உங்களுக்கு தெரியவில்லை
உங்களின் பொறமைபிடித்த கண்களுக்கு
நாங்கள் அந்நிய அடிமைகள் என்று எண்ணலாம்

குழந்தையின் மழலை பேச்சு தாய்க்கு புரியாதது
குழந்தையின் குற்றம் இல்லை