Wednesday, February 27, 2008

நிழல்


‍‍‍‍நிறவெற்றுமை
பார்க்காத‌
மனிதனின்
மறுபதிப்பு.

பேனா

மூவிரல்
நடுவே
சிலைகளை
செதுக்கும் ஊழி.

Tuesday, February 26, 2008

பார்வை




க‌ருவ‌றையில்
காத்த‌ அன்னையும்
ம‌ற‌க்க‌ வைத்து
க‌ல்ல‌றையில்
இத‌யம்க‌ருகும் வ‌ரை
க‌ன‌வுகாண‌ வைக்கும்
என்ன‌வ‌ளின் ஓர‌ப்பார்வை

Friday, February 22, 2008

கேள்வி-பதில்கள்

இவை அனைத்தும்

என் க‌ற்ப‌னை குதிரையின்

கால்சுவ‌டுக‌ள்

காத்துயிருக்கிறேன்

என் காதல் மனைவிக்காக...................






என்னுடைய‌ உள்ளங்கையில் எழுத சொன்னால்என்ன எழுதுவாய் என்று காதலியின் கேள்விக்குஎன்னுடைய பதில்கள்.






  1. ஓவிய‌த்தில்
    எப்ப‌டிய‌டி
    கிறுக்குவ‌து?

  2. பிர‌ம்ம‌னுக்கு
    மார்ட‌ன் ஆர்ட்
    வ‌ரைய‌ யார்
    க‌ற்றுகொடுத்தார்க‌ள்...

  3. உல‌க‌ம் உருண்டை
    என்றுஇருந்தேன் ‍‍‍‍‍‍‍‍‍
    ஆனால்அது ச‌துர‌ம‌டி.

  4. உன் கைரேகை
    பார்த்தேன்என்
    காத‌ல்ரேகை எங்கே?

  5. உன் உள்ள‌ங்கையின்இணைந்து
    இருக்கும் விர‌ல்க‌ளைபார்த்தேன் ...
    ந‌திநீர் இனைப்பு சாத்திய‌ம்டி....

  6. அணிலின் மீது
    ராம‌னின்விர‌ல்ரேகை ‍
    என்இத‌ய‌த்தில் உன்கைரேகை.

  7. உன் உள்ள‌ங்கையில் வைத்த‌
    பின்புதான் தெரிகிற‌து
    ம‌ருதாணியின் இன‌மே
    த‌ன் பிற‌வி ப‌ய‌னைஅடைந்துவிட்ட‌து என்று.

  8. உன் கைரேகையை
    வைத்துதானாஉல‌கில் உள்ள‌
    எல்லோருடைய‌ஜ‌த‌க‌த்தையும்
    க‌ணிக்கிறார்கள்.

  9. க‌ணிப்பொறி த‌ட்ட‌ச்சில்
    உள்ள‌ எழுத்துக்க‌ள்எல்லாம்
    ஏங்குகின்ற‌ன‌உன்
    உள்ள‌ங்கையால்
    முத்த‌ம் வாங்க‌.

  10. என் எண்ண‌த்தை
    பேனாவால் முத்த‌மிட‌வா?
    இல்லை
    உத‌ட்டால் எழுத‌வா?

  11. யார் சொன்னார்க‌ள்?
    எல்லா ம‌னித‌ர்க‌ளுக்கும்
    கைரேகைமாறுப‌டும் என்று
    என் கைரேகையும் இதுதானடி...

  12. நான் உல‌காலும் ம‌ன்ன‌ன்
    ஆனால்க‌ண்டிப்ப‌க
    உல‌க‌ வ‌ரைப‌ட‌த்ல்மாற்ற‌ம் இருக்கும‌டி.

  13. "உன்னுடைய‌ பெய‌ர்(.........) ம‌ணிகண்ட‌ பிர‌சாத்".