Wednesday, June 4, 2008

இதயத்தின் வலி

உன் கண்ணிரில் கரைந்தது
ரோஜாவின் வர்ணம் மட்டுமல்ல
நீ ஏற்க்க மறுத்த என் காதலும் தான்........

உன் தலையில் சூடுவாய் என நினைத்தேன்
உன் கண்ணிரிலே கரைத்துவிட்டாயடி
நான் ஒண்ணும் சாயம் வெளுக்கவில்லை
உன் கலங்கிய கண்களை பார்த்து
நான் வடித்த ரத்த கண்ணீர் கூட
உன் மீதான என் காதலை சொல்கிறதுபார்........

நீ வேண்டாம் என நிராகரித்த
சாயம் வேளுத்த ரோஜா தான் நான்
மலரும் ஓவ்வொரு மலருக்கும்
மணமேடையில் இருக்க ஆசைதான் அது
மயாணத்துக்கு போவது
மலரின் குற்றம் அல்ல

எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
ரோஜா இதழில் இருந்து கூட ரத்தம் சிந்தவைக்க.

உன் கண்களுக்கு மட்டும் தான் சக்தி
உண்டு என்று எண்ணினேன்
" உன் கண்ணிருக்கு கூட உள்ள சக்தியை பார் "

1 comment:

Arasu said...

Its superb ya
keep it up.