Thursday, June 12, 2008

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


ஒரு காதலனின் கற்பனையில் உருவான
காதலியின் பிறந்த நாள் வாழ்த்து செய்தி

1.இன்று என்ன வருடத்தின்
பெளர்ணமி நாளா
உலகமே உன்னை போல்
முழு நிலவாய் தெரிகிறதே

2. இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு
முன்பு பிரம்மன் பூமியின் மீது
எய்த பிரம்மாஸ்திரம் நீ

3.இளையராஜாவின் இசை,
ரவிவர்மாவின் ஓவியம்,
வைரமுத்துவின் கவிதை,
எல்லாவற்றிலும் ஒளிந்து
கொண்டிருக்கிறது உன் அழகு

4.நான் உலகாளும் மன்னன்
ஆனால் உலக விடுமுறை நாள்
இந்த நாளாக இருக்கும்

5.மழைக் காலம்,
இலையுதிர்காலம்,
கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!

6.எல்லோரும் பிறந்த நாளுக்கு
கோவிலுக்கு செல்வார்கள்
என் தெய்வமே நீ எங்கு செல்வாய்

7.தன்னுடைய படைப்பு இலக்கணத்தின்
மீது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை
தீர்ப்பதற்காக பிரம்மன் உருவாக்கிய
அழகு என்னும்பொருளின் எடுத்துக்காட்டு நீ

8. குழந்தைகள் தினம்,
ஆசிரியர் தினம் ,
காதலர் தினம் போல
இன்று என்ன
அழகு பெணின்
பிறந்த தினமா....(அழகி தினம்)

9. நீ கருவில் உருவாகும் போது
சரஸ்வதி தேவி வீணையின்இசை
உன் காதில் கண்டிப்பாக
கேட்டிருக்க வேண்டும்
ஆதலால் உனக்கு மட்டும்
இவ்வளவு அறிவு

10.உன்னை படைக்கும் போது பிரம்மன்
உச்சகட்ட சந்தோஷத்தில்
இருந்து இருக்கவேண்டும்
ஆதலால் தான் உனக்கு மட்டும்
இவ்வளவு அழகு

11.கர்ணணுக்கு கவசமும்
குண்டலும் போல
இந்த நூற்றாண்டில் பிரம்மனின்
மிக சிறந்த கண்டுபிடிப்பு
உனது அழகும் பொறுமையும்
12.எனக்கு மட்டும் வருடத்திற்கு
இரண்டு பிறந்த நாள்
உன் ஓவ்வொரு பிறந்த நாளிலும்
நான் புதிதாய் பிறக்கின்றேன்

13.ஒரு நாணயத்துக்கு
இரண்டு பக்கங்கள் போல
உனக்கு அழகும் அறிவும்

14. உன் பிறப்புக்கு பின்னால்தான்
பெண் குழந்தைகளை கொல்வது
சட்டபடி குற்றம் என்று
சட்டம் இயற்ற பட்டது

15.உன்னை தவிர உனக்கு
முன்னால் பிறந்த பெண்களும்
பின்னால் பிறந்த பெண்களும்
ஏதோ ஒரு விதத்தில் அழகில்
ஊனமாய் பிறந்து கொண்டு இருக்கிறார்கள்
16.எத்தனையோ எழுதிவிட்டேன்
உன்னை பற்றி ஆனால் ஒன்று கூட
உன்னை போல் அழகாய் இல்லை

Wednesday, June 4, 2008

இதயத்தின் வலி

உன் கண்ணிரில் கரைந்தது
ரோஜாவின் வர்ணம் மட்டுமல்ல
நீ ஏற்க்க மறுத்த என் காதலும் தான்........

உன் தலையில் சூடுவாய் என நினைத்தேன்
உன் கண்ணிரிலே கரைத்துவிட்டாயடி
நான் ஒண்ணும் சாயம் வெளுக்கவில்லை
உன் கலங்கிய கண்களை பார்த்து
நான் வடித்த ரத்த கண்ணீர் கூட
உன் மீதான என் காதலை சொல்கிறதுபார்........

நீ வேண்டாம் என நிராகரித்த
சாயம் வேளுத்த ரோஜா தான் நான்
மலரும் ஓவ்வொரு மலருக்கும்
மணமேடையில் இருக்க ஆசைதான் அது
மயாணத்துக்கு போவது
மலரின் குற்றம் அல்ல

எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
ரோஜா இதழில் இருந்து கூட ரத்தம் சிந்தவைக்க.

உன் கண்களுக்கு மட்டும் தான் சக்தி
உண்டு என்று எண்ணினேன்
" உன் கண்ணிருக்கு கூட உள்ள சக்தியை பார் "